சிறுசேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் எதுவும் இல்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: சிறுசேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் எதுவும் இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள், அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் 3 மாதத்துக்கு ஒரு முறை மாற்றுவது வழக்கம்

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டுக்கான (ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதிவரை) சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய காலாண்டில் அமலில் இருந்த வட்டி விகிதமே நீடிக்கும் என்றும் கூறியுள்ளது. எனவே, செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8.2 சதவீதம், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 7.7 சதவீதம், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5 சதவீதம் என அனைத்துக்கும் பழைய வட்டிவிகிதங்களே நீடிக்கும். இதன்மூலம், கடந்த 4 காலாண்டுகளாக வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

The post சிறுசேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் எதுவும் இல்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: