யுஜிசி நிதியை வழங்காமல் சர்வாதிகார போக்கோடு செயல்படும் ஒன்றிய அரசு: அமைச்சர் கோவி.செழியன் தாக்கு

கும்பகோணம்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தஞ்சை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறகுப்பந்து போட்டி கும்பகோணத்தில் இன்று துவங்கியது. போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் அளித்த பேட்டி: கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய யுஜிசி நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தியும் பல்லாயிரம் கோடி வழங்கப்படாமல் உள்ளது.

உயர்கல்வித்துறையை உயர்நிலைக்கு எடுத்து செல்லும் அரிய முயற்சியை தொடர்ந்து முதல்வர் செய்து வருகிறார். புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டால் தான் நிதி தருவேன் என்பது ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்காகும். மாணவர்களின் நலன்கருதி ஒன்றிய அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட்டு மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வை முறைப்படி வழங்க வேண்டும். உயர்கல்வியை உயர்ந்த இடத்துக்கு எடுத்து செல்வதற்கு முதல்வருக்கு ஒன்றிய அரசு துணை நிற்க வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post யுஜிசி நிதியை வழங்காமல் சர்வாதிகார போக்கோடு செயல்படும் ஒன்றிய அரசு: அமைச்சர் கோவி.செழியன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: