புதுடெல்லி: நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட 111 மருந்தின் மாதிரிகள் தரமானதாக இல்லை என கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் தெரியாத உற்பத்தியாளர்களால் பிரபல நிறுவனங்களின் பிராண்ட் பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது மேற்கொண்ட பல்வேறு மருந்தின் மாதிரிகளை சோதனை செய்தது. இதில் 41 மருந்தின் மாதிரிகள் நிலையான தரத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மாநில மருந்து பரிசோதனை ஆய்வகங்களால் பரிசோதனை செய்யப்பட்டதில் 70 மருந்துகள் நிலையான தரத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
The post 111 மருந்துகள் தரமானதாக இல்லை சிடிஎஸ்சிஓ தகவல் appeared first on Dinakaran.