அன்புமணியை சமாதானம் செய்ய குழு அமைக்க முடிவு?.. ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை

புதுச்சேரி: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப்பேரனுக்கு பொறுப்பு வழங்கியதால், மேடையிலேயே ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணியும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இருவரின் பனிப்போரால் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேடையில் இருந்து இறங்கி வந்த அன்புமணியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது ராமதாஸ் காரை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை அன்புமணியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.,

The post அன்புமணியை சமாதானம் செய்ய குழு அமைக்க முடிவு?.. ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: