×

தஞ்சை தமிழ் பல்கலை. பொறுப்பு துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் மாறி மாறி நீக்குவதாக அறிவித்ததால் சர்ச்சை!!

தஞ்சை : தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும்
மாறி மாறி நீக்குவதாக அறிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. தஞ்சை தமிழ் பல்கலை., பொறுப்பு பதிவாளர் தியாகராஜனை நீக்கம் செய்தார் பொறுப்பு துணைவேந்தர். தியாகராஜனை நீக்கி, வெற்றிச்செல்வனை பதிவாளராக நியமித்தார் பொறுப்பு துணைவேந்தர் சங்கர். அதே போல், ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட சங்கரை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் பாரதஜோதியை பொறுப்புத் துணைவேந்தராக நியமித்தார் தியாகராஜன்.

The post தஞ்சை தமிழ் பல்கலை. பொறுப்பு துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் மாறி மாறி நீக்குவதாக அறிவித்ததால் சர்ச்சை!! appeared first on Dinakaran.

Tags : Thanjai Tamil University ,Commissioner ,THANJAI ,TANJAI TAMIL UNIVERSITY ,Thyagarajan ,Viechelvan ,Deputy Minister ,of ,Dinakaran ,
× RELATED புகார் அளித்த 24 மணி நேரத்தில்...