×

சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு

சேலம், டிச.28: தமிழ்நாடு காவல்துறையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வருடாந்திர ஆய்வு பணியை மேற்கொள்கின்றனர். இந்தவகையில் ஆண்டு இறுதியான தற்போது, இத்தகைய ஆய்வுப்பணி தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதில், சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில், உட்கோட்ட டிஎஸ்பி பெரியசாமி நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார். பின்னர், காவல்நிலையத்தில் உள்ள துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை பார்வையிட்டு டிஎஸ்பி ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஸ்டேஷனில் காவலர்களின் பதிவேடுகள், குற்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நேற்று மாலை வரை நடந்தது.

The post சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Salem Railway Police Station ,Salem ,DSP ,IG ,Tamil Nadu ,Salem Railway Police… ,Dinakaran ,
× RELATED சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை...