இளம் பசுமை ஆர்வலர்களுக்கு மணிமுத்தாறில் 4 நாள் பயிற்சி

 

விருதுநகர், டிச.28: விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி அளிக்கும் கருத்தாளர்கள் மணிமுத்தாறுக்கு 4 நாள் சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி முகாமிற்கு சென்றனர். இந்த பயணத்தை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கு 4 நாள் சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி முகாம் மணிமுத்தாறில் உள்ள ஆர்டிஆர்இஇ மையத்தில் நடைபெற்று வருகிறது.

டிச.27 முதல் 30ம் வரை 4 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 25 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். மையத்தில் தங்கி இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு, சுற்றுப்புற சூழல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பயிற்சிகளை பெற உள்ளனர். அத்துடன் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், தேரிக்காடுகள் மற்றும் புன்னக்காயில் பகுதிகளை பார்வையிடுதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

The post இளம் பசுமை ஆர்வலர்களுக்கு மணிமுத்தாறில் 4 நாள் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: