நாகையில் மாநில சப்ஜூனியர் ஆண்கள் கபடி திருவாரூர் அணிக்கு சீருடை வழங்கி அனுப்பி வைப்பு

 

மன்னார்குடி, டிச. 28: தமிழ்நாடு மாநில 34வது சப் ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன் போட்டி, நாகை பாப்பாகோவில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் சார்பில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வடுவூர் விளையாட்டு அகாடமி உள் விளையாட்டரங்கில் சமீபத்தில் நடந்தது. 60 வீரர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்ட சப் ஜூனியர் அணிக்கு 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு கடந்த 5 நாட்கள் பயிற்சி முகாம் முடிந்து வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, வடுவூர் விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராச ராசேந்திரன் தலைமை வகித்தார். கபடி கழக புரவலர் அசோகன், வடுவூர் விளையாட்டு அகாடமி செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். வீரர்களுக்கு சீருடைகளை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா வழங்கினார். பின்னர் வீரர்கள் நாகை புறப்பட்டு சென்றனர்.

The post நாகையில் மாநில சப்ஜூனியர் ஆண்கள் கபடி திருவாரூர் அணிக்கு சீருடை வழங்கி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: