சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 5 ஆண்டு சிறை

ஆண்டிபட்டி, டிச. 28: தேனியில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (72). இவர், கடந்த 2022ல் 5 வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞராக அமுதா ஆஜராகினார். இந்த வழக்கில் நேற்று முன் தினம் நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அதில், ‘சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஈஸ்வரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 2 ஆயிரம் ரூபாய் அபராதம், இதை செலுத்த தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: