×

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 48-வது புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி தொடங்கியது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி இன்று முதல் 2025 ஜன.12-ம் தேதி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் புத்தக கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து இடங்களிலும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடியுடன் பல்வேறு பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 900 அரங்குகள் இடம்பெற்று உள்ளன.

சுமார் 15,000 கார்களை நிறுத்தும் வகையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் வாகன நிறுத்தும் இடங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : 48th Book Fair ,Nandanam ,YMCA ,Chennai ,Nandanam YMCA ,Book Fair ,Booksellers and ,Publishers Association of South India ,BAPASI ,Deputy Chief Minister ,Udhayanidhi ,
× RELATED சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது.!!