- இந்திய தேர்தல் ஆணையம்
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- திமுக
- அஇஅதிமுக
- இந்திய தேர்தல் ஆணையம்
- தின மலர்
இந்தியா: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெற்றன என்பது குறித்து முழுமையான தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திமுக 27 சதவீத வாக்குகளும், அதிமுக 20 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. உலகின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவான 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் எப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முழு தரவுகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெற்றன என்பது குறித்த தரவுகளும் இடம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக திமுக 27.1சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அடுத்தபடியாக அதிமுக 20.66 சதவீத வாக்குகளும், பாஜக 11.38 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 10.78 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 8.24 சதவீத வாக்குகளும் பாமக 4.35 சதவீத வாக்குகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2.27 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தேமுதிக 2.61சதவீதமும், மார்க்சிஸ்ட் 2.55 சதவீதம் இந்திய கம்யூனிஸ்ட் 2.17 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. மதிமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலா 1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
The post நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முழு தரவுகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.