- கோத்தகிரி
- பஞ்சாயத்து
- லக்ஷ்மி பவ்ய தனியு
- ஜக்கனாராய்
- Kunjappanai
- கோணவக்கரை
- கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்
- நீலகிரி மாவட்டம்
- பஞ்சாயத்து யூனியன்
- தின மலர்
கோத்தகிரி : கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கனாரை, குஞ்சப்பனை, கொணவக்கரை ஊராட்சிகளில் ரூ.2.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கனாரை, குஞ்சப்பனை, கொணவக்கரை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, ஜக்கனாரை ஊராட்சி பனகுடி பகுதியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் தலா ரூ.72 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10.80 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டு வரும் 15 வீடுகளின் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ் மூனு ரோடு பகுதியில் தலா ரூ.3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உதகை தும்பூர் சாலை வரை ரூ.37.95 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளையும், குஞ்சப்பனை ஊராட்சி, அறையூர் மட்டம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணியையும், காக்கா குண்டு பழங்குடியின கிராமத்தில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளின் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
கொணவக்கரை ஊராட்சி, தாலமொக்கை பகுதியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் தலா ரூ.5.73 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் சுட்டப்பட்டு வரும் 20 வீடுகளின் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
மொத்தம் ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, குறித்த நேரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களிடம் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தினார்.
மேலும் கெங்கரை ஊராட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். குஞ்சப்பனை ஊராட்சி, காக்கா குண்டு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள பழங்குடியினரிடம் கலந்துரையாடி, அவர்களிடம் பழங்குடியினர் சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய சான்றிதழ்கள் உள்ளனவா எனவும், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கௌசிக், கெங்கரை ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணியன், விஜயா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் ரூ.2.18 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.