சென்னை: பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார், இது கேலிக்கூத்தாக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பதவிக்கு ஆபத்து உள்ளது, சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஜோதிடர் யாரோ கூறியிருக்கிறார்கள். பா.ஜ.க.வினரே அண்ணாமலையின் இந்த போராட்டத்தை ஏற்பார்களா என்பது சந்தேகம். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தபோது அண்ணாமலை என்ன செய்துகொண்டிருந்தார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post அண்ணாமலை செயல் கேலிக்கூத்தாக உள்ளது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் appeared first on Dinakaran.