சென்னை: அவரைச் சந்தித்துப் பேசியது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மன்மோகன் சிங், ஈடு இணையற்ற அறிவுத்திறன் கொண்ட நேர்மையான தலைவர். அவரைச் சந்தித்துப் பேசியது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியங்களில் ஒன்று.
அவர் அளித்த ஊக்கமும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்த நற்பேறு. அவை நான் என்றென்றும் நெருக்கமாக வைத்திருக்கும் பொக்கிஷங்கள். அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ஜனநாயக கொள்கைகளுக்கான அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது, பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் காலத்திற்கும் நினைவுகூரப்படும் என தெரிவித்தார்.
The post அவரைச் சந்தித்துப் பேசியது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியம்: மன்மோகன் சிங் மறைவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் appeared first on Dinakaran.