சென்னை: திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:வள்ளுவ முனைதனில் வானுயர நிற்கும் பேரறிவுச் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் இளைய தலைமுறை, அய்யன் வள்ளுவர் வகுத்துள்ள தமிழ் வாழ்வியல் நெறியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறேன். வள்ளுவம் போற்றுதும்.
The post திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.