கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 8,000 போலீஸ்: 350க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் விடிய விடிய கண்காணிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தடையின்றி வழிபாட்டிற்கு வந்து ெசல்லும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், நேற்று இரவு முதல் இன்று வரை, சென்னை பெருநகர காவல் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின் பேரில், இணை கமிஷனர்கள் ஆலோசனையின் பேரில், துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என மொத்தம் 8 ஆயிரம் போலீசார் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முழு விவரம்:
* சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* மக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களின் அருகில் காவல் குழுவினர் மூலம் ஒலி பெருக்கியில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும் அறிவுறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறப்பு பிரிவுகள் மற்றும் சுற்றுக்காவல் வாகன காவல் குழுவினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வரவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நபர்கள் பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒளிரும் விளக்குகள் மூலம் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும், (ஏடிவி) மூலம் கண்காணித்து, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள்
* சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் சீரான போக்குவரத்து மற்றும் தேவாலயங்களின் அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்
பட்டுள்ளது.
* மேலும், முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ஏஎன்பிஆர் கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து தகுந்த ஆதாரத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 8,000 போலீஸ்: 350க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் விடிய விடிய கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: