நன்றி குங்குமம் தோழி
* வீட்டிலுள்ள பழுதான பழைய சுவிட்சுகள் மற்றும் வயர்களை அவசியம் அகற்றிவிட வேண்டும்.
* தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டார் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது சிறப்பு.
* பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனை பயன்படுத்தி சுவிட்ச் போடலாம்.
* மழைக்காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
* ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்சை அணைக்காமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.
அவ்வாறு அள்ளும் போது காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொள்ளலாம்.
* நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
*எர்த் லீக்கேஜ், சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம். செலவு பாராமல் வைக்க வேண்டும்.
* மொட்டை மாடியில் ஏதாவது வேலை செய்யும் போது, துணி காய வைக்கும் போது அருகே செல்லும் மின்சார வயர்கள் மீது கவனம் அவசியம்.
* இடி, மின்னல் ஏற்படும் சமயம் குறைந்த, அதிக மின்சாரம் வரும் வேளை அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* உலோக ஏணி, ஒட்டடை குச்சி கையாளும் பொது, விழாக்கால பந்தல் அமைக்கும் போதும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
*வீட்டில் இன்வெட்டர் இருந்தால் மின்சார பழுது பார்க்கும் போது அதன் இணைப்பையும் துண்டித்து விடுவது சிறந்தது.
தொகுப்பு: சுந்தரி காந்தி, சென்னை.
The post வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள்! appeared first on Dinakaran.