- திருவிளக்கு பூஜை
- ஐம்பொன் ஐயப்ப சேவா சங்கம்
- திருவள்ளூர்
- ராஜாஜிபுரம், திருவள்ளூர்
- ஐஆர்என்
- ஐவிஆர்
- முருகன்
- வள்ளி
- தெய்வானை
- விநாயகர்
- ஐயப்பன்
- சுவாமி
திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரத்தில் உள்ள ஐம்பொன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 26ம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜைகள் ஐஆர்என், ஐவிஆர் ஆகிய திருமண மண்டபங்களில் வெகு விமர்சையாக நடந்தது. முருகர், வள்ளி, தெய்வானை, விநாயகர், ஐயப்பன் சாமி சிலைகள் வைத்து கோயில் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த 1008 திருவிளக்கு பூஜைகளுக்கு குருசாமி எஸ்.ராஜ்குமார் தலைமை தாங்கினார். திருமண மண்டப உரிமையாளர்கள் ஐ.லட்சுமிபதி, ஐ.சந்திரசேகர் குருசாமிகள் ருக்மாங்கதன் கோபாலகிருஷ்ணன், ருத்ரமூர்த்தி, வரதராஜன், ராஜா, ராஜராஜன், வரதன், பூபாலன், சத்தியமூர்த்தி, ஜீவரத்தினம், சரவணன், கங்காதரன், முரளி, பழனி, சிட்டிபாபு, பெருமாள், ராமன், வேலு, நவீன் ராஜ், கார்த்திக்ராஜ், பிரபு சரவணன், லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
வித்யா உபாசகர் வேதாந்த ராமமூர்த்தி சுவாமிகள் மந்திரங்கள் சொல்ல பூஜைகள் நடைபெற்றது.
இதுவரை 108 திருவிளக்கு பூஜைகள் நடத்தி வந்த நிலையில் இந்த 26ம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
The post ஐம்பொன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.