×

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்று எதுவும் பேசவில்லை: ஒன்றிய இணை அமைச்சர் பேச்சு

சென்னை: ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், ​ஒன்றிய தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி நேரில் வந்து புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கினார்.  இதில் ஒன்றிய அரசின் அசாம் ரைப்பில் கிளப், இந்திய திபெத்தியன் எல்லை பாதுகாப்பு சி.ஆர்.பி.எப் படை, வங்கிகள் உள்ளிட்ட பணிகளில் தேர்வான 413 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தின் கூடுதல் காவல் இயக்குனர் ராஜிவ் ரஞ்சன் தலைமை தாங்கினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் சந்திரசேகர் பேசுகையில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். ஒரு தேர்தலுக்கு அரசு 10,000 கோடி ரூபாய் செலவிடுகிறது. அமைச்சர்கள் வேறு தொகுதிக்குச் சென்று பணியாற்றக்கூடிய சூழல் உள்ளது.

இதனால் நிர்வாகம் செய்யப்படுதல் பாதிக்கப்படுகிறது. இந்த 2024 தேர்தலில் ஒட்டுமொத்த அனைத்து கட்சிகளும் சேர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்று பேசவில்லை, வேண்டுமென்றுதான் பேசினார் என கூறுவதை தவிர காங்கிரசுக்கு வேறென்ன இருக்கப் போகிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் திசைதிருப்புகிறது’’ என்றார்.

The post அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்று எதுவும் பேசவில்லை: ஒன்றிய இணை அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Union ,Chennai ,Central Reserve Police Force Centre ,Avadi ,Union Communications and Rural Development ,Deputy Minister ,Chandrashekar Bemmasani ,United ,Deputy ,Minister ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்