×

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடக்க உள்ளதால் தமிழ்நாட்டில் 10 மெமு ரயில்களில் தலா 2 பெட்டிகள் குறைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 10 மெமு ரயில்களில், தலா 2 பெட்டிகள் குறைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்ததாவது: உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடக்க உள்ளதால் கூடுதல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகள் தேவைப்படுகிறது. இதனால், குறுகிய தூரத்தில் இயக்கப்படும் ‘மெமு’ வகை மின்சார ரயில்களில் பெட்டிகள் தற்காலிகமாக குறைத்து இயக்கப்பட உள்ளன.

அதன்படி, 10 ரயில்களில் தற்போதுள்ள 12 பெட்டிகளில் இருந்து தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி, எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயிலில் நேற்று முதல் 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்பட்டது. இதேபோல, புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில், திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில், புதுச்சேரியில் இருந்து எழும்பூர் செல்லும் ரயில் உள்ளிட்ட 10 மெமு ரயில்களில் நேற்று முதல் தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

The post உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடக்க உள்ளதால் தமிழ்நாட்டில் 10 மெமு ரயில்களில் தலா 2 பெட்டிகள் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Maha Kumbh Mela ,Uttar Pradesh ,MEMU ,Tamil Nadu ,Chennai ,Southern Railway ,Uttar Pradesh.… ,
× RELATED கும்பமேளா நடக்கும் பகுதி புதிய...