×

ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

தேன்கனிக்கோட்டை: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால், நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விலைவாசி உயர்ந்து வருகிறது.

ஜிஎஸ்டி இல்லாத பொருளே இல்லை. வைரத்திற்கு இரண்டரை சதவீதம் ஜிஎஸ்டி போட்டு, ஏழைகள் உடுத்தும் கைத்தறிக்கு 18 சதவீதம் வரியை போடுகிறார்கள். பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்திக்கிறார். ஆனால், டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து, கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்.

ஒன்றிய பாஜ அரசு விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காமல், ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும். மாநில உரிமைகள் பறிபோய் விடும். தேன்கனிக்கோட்டை பகுதியில், வனசரணாலயம் என்ற பெயரில் காலம், காலமாக வாழ்ந்து வரும் 138 கிராமங்களில் உள்ள விவசாயிகளை காலி செய்ய வைக்கிறார்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Thekkady ,Marxist Communist Party ,State Secretary ,Krishnagiri district ,
× RELATED கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!!