×

இன்ஸ்டா தோழி, நண்பருடன் சென்னை வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

உடுமலை: இன்ஸ்டா தோழி, நண்பருடன் சென்னை வாலிபர் குளத்தில் மூழ்கி இறந்தார். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவருக்கும் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிகோட்டையை சேர்ந்த தர்ஷனா (17). என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டது. தர்ஷனா அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 18ம் தேதி தர்ஷனாவுக்கு பிறந்த நாள். இதனை கொண்டாட ஆகாஷ் சென்னையில் இருந்து உடுமலை வந்தார். தோழியின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (20). கடந்த 18ம் தேதி இவர்கள் 3 பேரும் பைக்கில் டிரிபிள்ஸ் சென்றனர். இதனை இந்த பகுதி மக்கள் பார்த்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்கள் மாயமானார்கள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அருகில் உள்ள மானுப்பட்டி எலயமுத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தில் 3 பேரின் உடல்கள் மிதந்தன. இதனைப்பார்த்த பொதுமக்கள் அமராவதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தியபோது 18ம் தேதி மாயமான ஆகாஷ், தர்ஷனா, மாரிமுத்து ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பைக்கில் 3 பேர் சென்றபோது குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற தெரிய வருவதாக போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post இன்ஸ்டா தோழி, நண்பருடன் சென்னை வாலிபர் குளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Instagram ,Udumalai ,Akash ,Velachery, Chennai ,Darshana ,Kurichikottai ,Tirupur district ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...