ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலந்தூர் தர்மராசா கோயில் தெருவில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் தலைமை வகித்தார். பகுதி இளைஞரணி அமைப்பாளர் கோ.பிரவீன் குமார் வரவேற்றார். பகுதி செயலாளர்கள் குணாளன், என்.சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இரா.கருணாநிதி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘இந்தியாவிலேயே 50 லட்சம் இளைஞர்களை கொண்ட பலமான மாநில கட்சியாக திமுக திகழ்கிறது.
ஜெயலலிதா போல் அதிமுகவினரை நடுரோட்டில் விட்டுவிடவில்லை. 75 ஆண்டுகாலம் ஒரே கட்சி, ஒரே சின்னம் என்று திமுக உள்ளது. உதயநிதி சுற்றிசுற்றி இயக்க பணியும் ஆட்சி காலத்தில் பணியும் செய்து வருகிறார். அதிமுகவினருக்கு திராவிட மாடல் என்றாலே எரியுது. திமுக ஆட்சியை எப்படி ஒழிக்க வேண்டும் என தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். விடியா முகத்துடன் இருப்பதால் விடியா ஆட்சி என்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர். சினிமாவை பார்த்து ரசித்து வந்து விடவேண்டும். யாரையும் நினைக்க கூடாது’ என்றார். திண்டுக்கல் லியோனி பேசுகையில், ‘பெண்களை நம்பியதால் முதல்வர் உரிமை தொகையை பெண்கள் கையில் தந்துள்ளார். புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்கள், பாஜ எங்களுக்கு கொள்கை எதிரி. திமுக அரசியல் எதிரி என்கிறார்கள்.
அப்படி என்றால் திமுகவின் கொள்கையை ஏற்று கொள்வீர்களா? தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. அம்பேத்கர் கனவை நிறைவேற்றி வருவது திராவிட மாடல் ஆட்சி. பாஜ, அதிமுக கட்சிகளை 2026ம் ஆண்டு மக்கள் தூக்கி எறிவார்கள்’ என்றார். கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோடீஸ்வரன், கவுன்சிலர்கள் பிருந்தா , முரளி கிருஷ்ணன், செல்வேந்திரன், சாலமன், வட்ட செயலாளர் கே.பி.முரளி, கிருஷ்ணன், ஜெ.நடராஜன், சீனிவாசன், ஜெகதீஸ்வரன், கருணாநிதி, ரவி மற்றும் கலாநிதி குணாளன், ஆனந்தன், சுகுணா, கார்த்திக்தரணி வேந்தன், தீனதயாளன், உதயா, அபுதாஹீர், காஜா மொய்தீன் உட்பட பழக கலந்து கொண்டனர்.
The post திராவிட மாடல் என்றால் அதிமுகவினருக்கு எரியுது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் தாக்கு appeared first on Dinakaran.