மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.6% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிந்து 77,875 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. வங்கித்துறை, வாகன தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவன பங்குகளும் விலை குறைந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 414 புள்ளிகள் சரிந்து 23,537 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: