மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிந்து 81,749 புள்ளிகளானது. நண்பகல் வர்த்தகத்தின்போது 582 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருந்த சென்செக்ஸ் இறுதியில் சற்று முன்னேறி முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து 24,668 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது. டைட்டன் பங்கு 2.1% அதானி போர்ட்ஸ், டி.சி.எஸ்., அல்ட்ரா டெக் சிமென்ட் பங்குகள் 1% விலை குறைந்து வர்த்தகமாயின. என்.டி.பி.சி., பார்த்தி ஏர்டெல், டெக் மகிந்திரா, JSW ஸ்டீல், இன்போசிஸ் பங்குகள் 1% விலை குறைந்து விற்பனையாயின. இந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல். டெக், டாடா ஸ்டீல், நெஸ்லே உள்ளிட்ட பங்குகளும் விலை குறைந்தன
The post சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிவு appeared first on Dinakaran.