அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு டிசம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 325 பேருந்துகளும், டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு டிசம்பர் 20ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் மாதவரத்திலிருந்து மொத்தம் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலை தவிர்க்கும்வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 705 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.