- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரசு விரைவு போக்குவரத்து கழகம்
- ஜிடிசி
- சென்னை
- நிர்வாக இயக்குனர்
- அரசு எக்ஸ்பிரஸ் போக்குவரத்துக் கழகம்
- கிறிஸ்துமஸ் நாள்
- அரசு விரைவு போக்குவரத்து கழகம்
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் “ இன்று டிசம்பர் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை, டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு டிசம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 325 பேருந்துகளும், டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு டிசம்பர் 20ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் மாதவரத்திலிருந்து மொத்தம் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலை தவிர்க்கும்வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 705 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.