ஏற்கனவே இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தொடர்ந்து அமித்ஷாவின் ராஜினாமாவை பற்றியும், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும், நாடாளுமன்றம் கூடிய பிறகு இரு அவைகளிலும் இவ்விவகாரத்தை எழுப்பி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ராஜினாமாவை கேட்பது அல்லது உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமானப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே வேறொரு இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருபோதும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்கமாட்டார். ராஜினாமாவும் செய்யமாட்டார் அவர் உள்துறை அமைச்சராகவே நீடிப்பார் எனபாஜக எம்பிக்கள் தெரிவித்தார். இரு தரப்பினரும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வெவ்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த போராட்டம் முடித்த பிறகு அனைத்து எம்.பி.க்களும் 11 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியை சார்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்பிரச்சனையை எழுப்புவதற்கு முடிவு செய்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அமித் ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் அதனை எதிர்த்து பாஜக எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்தது.
The post நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி – பாஜக எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு..!! appeared first on Dinakaran.