திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்திரப்பட்டியை சேர்ந்த பிரபல நிதி நிறுவன அதிபர் செந்தில் குமார் செங்கல் சூளை மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமார் இல்லத்தில் 6 காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரி சோதனைக்கு ஆளாகி உள்ள செந்தில்குமார், பாஜக நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என தகவல் தெரியவந்துள்ளது.
The post திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை..!! appeared first on Dinakaran.