×

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு திமுக கடிதம்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவையில் மசோதா கொண்டுவரப்பட்டால் பேச அனுமதிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாவுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், நேற்றே மக்களவையில் 2 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல் செய்து பேச உள்ளார்.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி.க்கள் குழு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவையில் மசோதா கொண்டுவரப்பட்டால் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கனிமொழி நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு திமுக கடிதம் appeared first on Dinakaran.

Tags : Speaker of the People ,Chennai ,Lok ,MLA ,Speaker ,Dimuka MP ,B. Chairman ,Board ,D. R. Balu ,People's Republic ,Speaker of ,
× RELATED அரசியலமைப்பு சட்டத்தை வெறுத்து...