கொசாவோ நாட்டின் தலைநகர் பிரிஸ்டினாவில் 9ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தாத்தாகளின் ஓட்டம் வழக்கமான கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் கொசாவோ தலைநகர் பிரிஸ்டினாவில் பிரசித்தி பெற்ற கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் ஓட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பங்கேற்றனர். கைகளில் பரிசுகள், இனிப்புகளை எடுத்து கொண்டு பிரிஸ்டினா நகர வீதிகளில் ஓடிய கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஏழை வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவினர். இந்த ஓட்டத்தில் கொசாவோ நாட்டினர் மட்டுமில்லாமல் வெளிநாட்டவரும் பங்கேற்றனர்.
The post கொசாவோவில் பிரசித்தி பெற்ற கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் ஓட்டம்..!! appeared first on Dinakaran.