- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐகோர்ட் சரமரி
- சென்னை
- Icourt
- சென்னை உயர் நீதிமன்றம்
- கோகிலா
- புதுச்சேரி
- மகல்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் புகார் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை,” என குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு மீதான முந்தைய விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் ரூ.1.4 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் வெளியானதை குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக் கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார்.
அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள்,” தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? தவறு இழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,”எனக் கூறினர். இதற்கு பதில் அளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதி தெரிவித்தார்.இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் புகார் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? : ஐகோர்ட் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.