தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பெரிய ஓடையில் சில ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மாற்று பாதை வழியாக மயானத்துக்கு செல்ல சுமார் 7 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் இதனை தவிர்க்கும் பொருட்டு இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஆபத்தை உணராமல் ஓடையில் செல்லும் வெள்ளத்தில் மார்பளவு தண்ணீரில் மூழ்கியபடி கடந்து சென்று அடக்கம் செய்தனர்.
இதனை சிலர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. பெரிய ஓடையை கடந்து மயானத்திற்கு செல்ல ஏதுவாக பாலம் அமைத்து தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மயானத்தை வேறு இடத்திலாவது மாற்றி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பெரிய ஓடையில் வெள்ளப்பெருக்கு மார்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து சென்ற கிராமத்தினர் appeared first on Dinakaran.