தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் 225 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தகவல் தெரிவித்துள்ளார். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது; விரைவில் இழப்பீடு வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 80 குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களைக் கொண்டு அகற்றி வருகிறோம். 8 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. ஏரல் தரைப்பாலத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்றும் கூறினார்.
The post மழை, வெள்ளம்: தூத்துக்குடியில் 225 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.