- விஜய் திவாஸ் தினம்
- வெற்றி நினைவுச்சின்னம்
- சென்னை
- வங்காளம்
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- விஜய் திவாஸ்…
- தின மலர்
சென்னை: விஜய் திவாஸ் தினம் வெற்றிப் போர் நினைவுச் சின்னத்தில் தன்னுயிரை ஈத்த ராணுவ வீரர்களுக்கு செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார்.1971ம் ஆண்டு வங்கதேசம் தனிநாடாக பிரிந்த போது, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா பெற்றி பெற்றது. இந்த நாளை விஜய் திவாஸ் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்களின் துணிச்சல், வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றும் விதத்தில் இந்த நாளில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இன்று (16.12.2024) மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் MC அவர்களின் ஏற்பாட்டில் எனது தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள வெற்றிப் போர் நினைவுச் சின்னத்தில் தன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
The post விஜய் திவாஸ் தினம்: வெற்றிப் போர் நினைவுச் சின்னத்தில் தன்னுயிரை ஈத்த ராணுவ வீரர்களுக்கு செல்வப்பெருந்தகை மரியாதை appeared first on Dinakaran.