×

கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு

சென்னை: மார்கழி பிறப்பு, ஐயப்பன் கோயில் செல்லும் சீசனால் சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மழையால் பூக்கள் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப்பூ ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. ரூ.200-க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி ரூ.750-க்கும் ரூ.500-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனையாகிறது. விலை மாற்றமின்றி சாமந்தி ரூ.160-க்கும் சம்பங்கி ரூ.150-க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbaté ,Chennai ,Marghazi ,Ayyappan Temple ,Coimpet ,
× RELATED மார்கழி உற்சவம்!