வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகர மன்ற தலைவர் பார்வையிட்டார்

வேதாரண்யம், டிச.16: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை பாதித்த 21 வார்டு பகுதிகளையும் நகர மன்ற தலைவர் புகழேந்தி நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு மழை நீர் வடிய வைக்க்கும் பணியினை துரிதப்படுத்தி எதிர்காலத்தில் மழைநீர் தேங்கமால் இருக்க வழிவகைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் நகராட்சி பகுதியில் பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக 7 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் செய்யபட்டு மழையால் புதிதாக போடபட்டுள்ள சாலைகளில் இருபுறமும் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், மணல் மூட்டைகள் போடப்பட்டு சாலையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பணி தோப்புத்துறை, ராஜாளிகாடு, குமரன்காடு, குத்ததேவன் காடு, உள்ளிட்ட 20 இடங்களில் இப்பணி நடைபெற்றது. இப்பணியினையும் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி பார்வையிட்டார்.அப்போது, நகராட்சி பணிமேற்பார்வையாளர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.

The post வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகர மன்ற தலைவர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: