கமுதி அருகே சின்ன உடப்பங்குளத்தில் சிசிடிவி கேமரா பொருத்தம்: ஊராட்சி தலைவருக்கு எஸ்பி பாராட்டு

 

கமுதி, டிச. 16: கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வாசுதேவன் தனது சொந்த செலவில் கிராமத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் உபகரணங்கள் அமைத்து கொடுத்துள்ளார். இதன் துவக்க விழாவிற்கு மாவட்ட எஸ்பி சந்தீஷ் தலைமை தாங்கி சிசிடிவி இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான வாசுதேவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அப்போது எஸ்பி கூறும் போது, கிராம பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்பகுதியில் குற்றச்செயல்கள் ஏதும் நடந்தால் அதனை கண்காணிப்பதற்கும், மேலும் நடைபெறாமல் இருக்க தடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, மற்ற கிராமங்களிலும், இதுபோன்று சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும், என்றார்.மேலும் ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கமுதி அருகே சின்ன உடப்பங்குளத்தில் சிசிடிவி கேமரா பொருத்தம்: ஊராட்சி தலைவருக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: