புதுடெல்லி: சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், அடமானமில்லா பயிர் கடன் உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வரும் ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர் கடன் ரூ.1.60 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உச்ச வரம்பை உயர்த்த விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அதை ஏற்று, அடமானமில்லாத பயிர் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என ஒன்றிய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இதை நடைமுறைக்கு கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கான சொத்து அடமானம் இல்லாத பயிர் கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய கடன் வழங்கல் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சிறு, குறு நிலங்களை வைத்துள்ள 86 சதவீத விவசாயிகள் பலன் அடைவார்கள் என ஒன்றிய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
The post ரிசர்வ் வங்கி அறிவிப்பு பயிர் கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு: ஜனவரி முதல் அமலுக்கு வரும் appeared first on Dinakaran.