- கர்நாடக
- பாஜக
- சிறுபான்மை நல ஆணையம்
- சித்தராமையா
- பெங்களூரு
- விஜயேந்திரா
- சிபிஐ
- அன்வர் மணிப்பாடி
- எடியூரப்பா
- முதல் அமைச்சர்
- வக்ஃப் வாரியம்
- தின மலர்
பெங்களூரு: வக்பு வாரிய சொத்து ஆக்கிரமிப்பு விவகாரத்தில், எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பாஜ ஆட்சியில் சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக இருந்த அன்வர் மணிப்பாடி மவுனம் காக்க விஜயேந்திரா ரூ.150 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது குறித்து சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, வக்பு சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதற்கு, அப்போது சிறுபான்மை நல ஆணையத் தலைவராக இருந்த அன்வர் மணிப்பாடிக்கு விஜயேந்திரா ரூ.150 கோடி லஞ்சம் தர முயன்றிருக்கிறார். அன்வரின் வீட்டுக்கே சென்று ரூ.150 கோடி லஞ்சம் தருவதாக விஜயேந்திரா கூறியதாகவும், அதற்கு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டதாகவும் அன்வர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாஜ தலைவரிடம் புகார் அளித்ததாகவும் அன்வர் கூறியிருக்கிறார். வக்பு சொத்துகளின் மீது விஜயேந்திராவின் ஆர்வத்தைப் பார்க்கும்போது, வக்பு சொத்துகளை அபகரிப்பதில் அவரும் அவரது குடும்பத்தினரும் நேரடியாக ஈடுபடுவது போல் தெரிகிறது. மணிப்பாடியை அமைதிப்படுத்தும் சதியில் யார் ஈடுபட்டனர்? வக்பு சொத்துகளை கொள்ளையடித்ததில் வேறு யார் யார் ஈடுபட்டனர்? என்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
The post சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவருக்கு ரூ.150 கோடி லஞ்சம் கொடுக்க கர்நாடக பாஜ தலைவர் முயற்சி: சித்தராமையா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.