×

திருப்பூர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு விருந்து

 

திருப்பூர், டிச.10: தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம்,தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 51 வது வட்டக் கழகம் சார்பில் காட்டுவளவு ஆர்.வி.இ.லேஅவுட் பகுதி மற்றும் 52 வது வட்டக் கழகத்தின் சார்பில் வெள்ளியங்காடு முத்தையன் கோவில் ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்‌.ஏ., மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி நாகராசன்,திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாலதி நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விருந்து வழங்கினர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு விருந்து appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Udayanidhi Stalin ,Tamil Nadu ,Deputy ,Chief Minister ,DMK ,Youth Secretary ,Udhayanidhi Stalin ,Vatta Kazhagam ,Tirupur North District ,South Assembly Constituency ,Kadtuvallu RVE ,52 ,Tirupur Udhayanidhi ,Stalin ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே...