×

சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வணிக மனை மீட்பு..!!

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வணிக மனை மீட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின் படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று (12.12.2024) சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வணிக மனை மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் பொது நல நிதியின் மூலம் புனரமைப்பு மேற்கொள்ளும் வகையில் திருப்பணிகள் தொடங்க உள்ளதால் இன்று (12.12.2024) திருக்கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு தாரர்களை அகற்றிடும் வகையில் உஸ்மான்கான் தெருவில் 520 சதுரடி கொண்ட வணிக மனையில் அமைந்துள்ள கட்டிடம் சென்னை-2 உதவி ஆணையர் பாரதிராஜா முன்னிலையில் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்த நிகழ்வின் போது திருக்கோயில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் மணி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வணிக மனை மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Arulmiku Nageshwari Amman temple ,Sintadiripet ,CHENNAI ,Chief Minister ,M.K.Stal ,Hindu Religious Charities ,Minister ,Shekhar Babu ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...