டெல்லி: கடும் எதிர்ப்புக்குள்ளான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின், விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.