சோமனூரில் நாளை மின்தடை

 

சோமனூர், டிச.13: சோமனூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் நாளை (13ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், சோமனூர் பகுதிக்கு உட்பட்ட சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டியபாளையம், செந்தில்நகர், பரமசிவம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர்பந்தல், செகுடந்தாளி, எளச்சிபாளையம், காளிபாளையம் ஒரு பகுதி, மற்றும் அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சோமனூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

The post சோமனூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: