கோவை, டிச. 13: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையான பி-சோன் வாலிபால் போட்டி நேற்று துவங்கியது. கோவை அரசு கலைக்கல்லூரியில் துவங்கிய போட்டியை கல்லூரி முதல்வர் எழிலி துவக்கி வைத்தார். இதில், கோவை, அவினாசி, தொண்டாமுத்தூர், பல்லடம் உள்ளிட்ட அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.
நாக்அவுட் சுற்று முறையில் இரண்டு நாட்கள் போட்டிகள் நடக்கிறது. இதில், நேற்று நடந்த கோவை தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி, ஏ.ஜி கல்லூரிக்கு இடையான போட்டியில் ஏ.ஜி கல்லூரி வெற்றி பெற்றது. தொடர்ந்து, கே.கே கலல்லூரி, பிஷப் அம்புரோஸ் கல்லூரிகளுக்கு இடையான போட்டியில் கே.கே கலை அறிவியல் கல்லூரி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இன்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடக்கின்றன.
The post பாரதியார் பல்கலை. சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி appeared first on Dinakaran.