பாஸ்டெர்ரே: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேசம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், செயின்ட் கிட்ஸ் நகரில் நேற்று 2வது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்கதேச வீரர்கள் மோசமாக ஆடி, 45.5 ஓவருக்கு 227 ரன்னில் ஆல் அவுட்டாகினர்.
தொடர்ந்து, 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் 82 ரன் எடுத்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 26.5 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
The post வங்கதேசத்துடன் 2வது ஓடிஐ வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.