- ஐசிசி
- ஹாரி புரூக்
- லண்டன்
- இங்கிலாந்து
- ஹாரிபுரூக்
- ஐசிசி கிரிக்கெட்
- இந்தியா
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- இங்கிலாந்து
- தின மலர்
லண்டன்: ஐசிசி கிரிக்கெட் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹேரி புரூக் 898 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ம் இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப்பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் ஹேரி புரூக் 898 புள்ளிகளுடன், 2 இடங்கள் உயர்ந்து முதலிடம் பிடித்தார். முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 2ம் இடத்தில் இருந்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 812 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு வந்துள்ளார்.
இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 811 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5, இலங்கையின் கமிந்து மெண்டிஸ் 6, தென் ஆப்ரிக்காவின் டெம்பா பவுமா 7, நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 8வது இடங்களை பிடித்தனர். இந்தியாவின் ரிஷப் பண்ட், பாகிஸ்தானின்சவுட் ஷகீல் 724 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளனர். ரிஷப் பண்ட் 3 இடங்கள் கீழே இறங்கி உள்ளார். இந்த பட்டியலில், இந்தியாவின் சுப்மன் கில் 17வது இடத்திலும், விராட் கோஹ்லி 6 இடங்கள் கீழிறங்கி 20வது இடத்திலும் உள்ளனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் 30 இடங்களுக்குள் இல்லை. அவர் 5 இடங்கள் சரிந்து 31வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தர வரிசைப்பட்டியலில், இந்தியாவின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 890 புள்ளிகளுடன், 2 இடங்கள் உயர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா 856 புள்ளிகளுடன் 2, ஆஸியின் ஜோஷ் ஹேசல்வுட் 851 புள்ளிகளுடன் 3வது இடங்களில் உள்ளனர். ஆஸியின் பேட் கமின்ஸ் 4, இந்தியாவின் அஸ்வின் 5, ரவீந்திர ஜடேஜா 6வது இடங்களில் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 415 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 3ம் இடத்தில் உள்ளார்.
The post ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில்: ஹேரி புரூக்கிற்கு முதலிடம் appeared first on Dinakaran.