சென்னை: உன் மீசையைப் போலவே நிமிர்ந்து வணங்குகிறேன் உன்னை என பாரதியாரின் பிறந்தநாளில் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லாக் கவிஞனும் நிலைப்பதில்லை; நீ நிலைக்கிறாய் காரணம் நீ முக்காலத்தின் குரல். உன் சொற்கள்நிகழ்காலத்திலும் ஏன் நீள்கின்றன? அவை நித்தியத்தின் சத்தியங்கள். அமரன் படத்தில் துப்பாக்கிச் சத்தத்தின் தப்பாத தாளத்தில் வீரர்கள் பாடும் அச்சமில்லை அச்சமில்லை காலம் கடக்கும் உன் தமிழென்று கட்டியம் கூறும். எட்டயபுரத்தில் மட்டும் எப்படி ஒருத்திக்கு நெருப்பைச் சுமந்த கருப்பை? இந்த வரிகள் சொல்லும் உன் இருப்பை உன் மீசையைப் போலவே நிமிர்ந்து வணங்குகிறேன் உன்னை இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.
The post உன் மீசையைப் போலவே நிமிர்ந்து வணங்குகிறேன் உன்னை: மகாகவி பிறந்தநாளில் வைரமுத்து வாழ்த்து appeared first on Dinakaran.