மயிலாடுதுறையில் காமாட்சி மெடிக்கல் சென்டரின் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

மயிலாடுதுறை,டிச.11: மயிலாடுதுறை ஏகே மஹாலில் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மங்கை சங்கர், அரசு வழக்கறிஞர் சேயோன், ரோட்டரி சங்க தலைவர் யஷ்வந்த் ஜெயின் மற்றும் செந்தில் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். காமாட்சி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்கே.இனியன், முதன்மை செயல் அலுவலர் டாக்டர் எஸ்.ரமேஷ்பாபு, முதன்மை ஆலோசகர் டாக்டர் கே.மோகன், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.செந்தில் குமார், இருதய சிகச்சை நிபுணர் டாக்டர் ஜே.இளங்குமரன், மூளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.மனோஜ் சந்திரன் ஆகியோர் மருத்துவ விழிப்புணர்வு உரையாற்றினர்.

மருத்துவ செயல் விளக்க வீடியோ காட்சிகள் திரையிடபட்டது. பொது மக்களின் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. விபத்து மற்றும் அவசர சிகச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர் டாக்டர் தீபக் நாராயணன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post மயிலாடுதுறையில் காமாட்சி மெடிக்கல் சென்டரின் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: