மாங்காய் கீர்

தேவையானவை:

மாங்காய் – 2,
சர்க்கரை – 5 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – ½ கப்,
மில்க் மெய்ட் – 3 டேபிள் ஸ்பூன்,
பால் – 1 கப்,
நெய் – 1டீஸ்பூன்,
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை,
குங்குமப்பூ – சிறிதளவு,
முந்திரி, பாதாம் – தலா 5.

செய்முறை:

மாங்காயை தோல் சீவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதில் சர்க்கரை, மாங்காய் கூழ் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு அதில் பால், மில்க் மெய்ட், ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் போட்டால் ‘மாங்காய் கீர்’ ரெடி.

The post மாங்காய் கீர் appeared first on Dinakaran.